செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்: சிலாங்கூர் மனிதவள மேம்பாட்டுக் கழகம் கல்வி சேவை தொடரும்: சுகுமாரன்
பெட்டாலிங் ஜெயா:
சிலாங்கூர் மனிதவள மேம்பாட்டுக் கழகம் கல்வி சேவை தொடரும் என்று அதன் தலைவர் சுகுமாரன் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகள் கல்வி பயில்வதற்கு மடிக்கணினிகள் அத்தியாவசியமானதாக உள்ளது.
இதன் அடிப்படையாக கொண்டு வசதிக் குறைந்த மாணவர்களும் சொந்தமாக மடிக்கணினிகளை கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் இம்முயற்சியை தொடங்கினோம்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இம்மாணவர்களுக்கு கழகத்தின் சார்பில் மடிக்கணினிகள் வழங்கபட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இதுவரை 800 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்ப்பட்டது.
குறிப்பாக அண்மையில் 82 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
இம்முயற்சி உறுதுணையாக இருக்கும் முன்னாள் சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
இந்த விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பல நல்லுள்ளங்கள் உறுதுணையாக இருந்தனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் இன்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. செனட்டர் டத்தோ சிவராஜ் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய அங்கமாக எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மூன்று மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
இம்மடிக்கணினிகள் மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக சுகுமாரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 5:46 pm
லெபனான் நிறுவனத்தின் நகைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை: ரோஸ்மா
April 13, 2026, 5:45 pm
பொறியியல் நிறுவனத்திடமிருந்து பெர்சத்து கட்சிக்கு 800,000 ரிங்கிட் கிடைத்தது: வங்கி அதிகாரி
April 13, 2026, 5:43 pm
மக்களின் குரல்களும் கருத்துகளும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்: ரவீன்குமார்
April 13, 2026, 5:25 pm
முதலில் நட்பு, பிறகு காதல், இறுதியில் ஏமாற்றம்: காஜாங்கில் இயங்கிய லவ் ஸ்கேம் கும்பல் பிடிபட்டது
April 13, 2026, 4:28 pm
மாணவியைக் காலால் உதைத்துத் தள்ளிய மாணவன்: பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி
April 13, 2026, 4:08 pm
உயர்கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'மெனு காசெ சிஸ்வா' உணவுத் திட்டம்
April 13, 2026, 3:44 pm
