செய்திகள் மலேசியா
ஶ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம் திட்டம்; பினாங்கு மாணவர்களிடையே கல்வி புரட்சியை ஏற்படுத்தும்: டத்தோஸ்ரீ சுந்தரராஜூ
பிறை:
ஶ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம் திட்டம் பினாங்கு மாநில மாணவர்களிடையே கல்வி புரட்சியை ஏற்படுத்தும்.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
நாட்டில் இந்திய சமுகம் பல துறைகளில் விழிபட்டைய பல கருத்தரங்குகளை நடத்தி வரும் வேளையில் ஸ்ரீ முருகன் நிலையம் நாடு தழுவிய நிலையில் கல்வி யுத்தம் நிகழ்வை நடத்தி வருகிறது.
அந்த வகையில் பினாங்கு மாநிலத்தில் நேற்று கல்வி யுத்தம் நிகழ்வு மிகவும் சிறப்பு நடத்தியது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட இந்த நிகழ்வை பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜூ சோமு நிகழ்வை தொடக்கி வைத்து பேசினார்.
ஸ்ரீ முருகன் நிலையம் என்பது மலேசியாவில் இயங்கி வரும் கல்வி மையம் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருவதை வெகுவாக பாராட்டினார்.
1982 செப்டம்பர் 24ஆம் தேதி கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
இந்தக் கல்வி மையம் உருவாவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் டான் ஸ்ரீ எம். தம்பிராஜா. இவருடன், மலாயா பல்கலைக் கழகத்தின் மேலும் 42 தமிழ்மொழிக் கழகப் பட்டதாரி மாணவர்கள் இணைந்து அந்த மையத்தை உருவாக்கினார்கள்.
ஸ்ரீ முருகன் நிலையம், மலேசியாவில் பல இந்தியப் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
மலேசிய இந்தியர்களின் கல்வித் தரத்தை உலகளாவிய நிலையில் அறியச் செய்யும் சாதனையை படைத்து வருகிறது. ஸ்ரீ முருகன் நிலையத்தின் சேவைகள் பாராட்டுக்குரியவை.
அண்மையில் எஸ்பிஎம் தேர்வில் இந்திய மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப்பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சமுக அமைப்புகள் தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சுந்தர்ராஜூ கேட்டுக் கொண்டார்.
இதில் உரையாற்றிய ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் சுரேன் கந்தா, தங்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கு பெற்றோர்கள் வழங்கி வரும் பேராதரவு மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்ந நிலையை அடைந்து வருகிறார்கள் .
இந்த சேவை மேலும் தொடர்தால் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 5:46 pm
லெபனான் நிறுவனத்தின் நகைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை: ரோஸ்மா
April 13, 2026, 5:45 pm
பொறியியல் நிறுவனத்திடமிருந்து பெர்சத்து கட்சிக்கு 800,000 ரிங்கிட் கிடைத்தது: வங்கி அதிகாரி
April 13, 2026, 5:43 pm
மக்களின் குரல்களும் கருத்துகளும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்: ரவீன்குமார்
April 13, 2026, 5:25 pm
முதலில் நட்பு, பிறகு காதல், இறுதியில் ஏமாற்றம்: காஜாங்கில் இயங்கிய லவ் ஸ்கேம் கும்பல் பிடிபட்டது
April 13, 2026, 4:28 pm
மாணவியைக் காலால் உதைத்துத் தள்ளிய மாணவன்: பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி
April 13, 2026, 4:08 pm
உயர்கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'மெனு காசெ சிஸ்வா' உணவுத் திட்டம்
April 13, 2026, 3:44 pm
