செய்திகள் மலேசியா
லெபனான் நிறுவனத்தின் நகைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை: ரோஸ்மா
கோலாலம்பூர்:
2018 பொதுத் தேர்தலுக்கு முன்பு ஒரு லெபனான் நிறுவனம் தனக்கு வழங்கிய 44 நகைகளில் எதையும் தான் ஒருபோதும் அணியவில்லை.
டத்தோஶ்ரீ நஜிப்பின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
அப்போதைய பிரதமரான தனது கணவர் நஜிப் ரசாக்கிற்காகப் பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக இருந்ததாகவும், அந்த நகைகளைத் தனது உதவியாளர் ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அந்த நகைகளைப் பயன்படுத்தும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை.
சுல்தான் ஹசனால் போல்கியாவின் மனைவிகளில் ஒருவர் எனக்கு அறிமுகப்படுத்திய சமேரைப் புண்படுத்தாமல் இருப்பதற்காகவே நான் அவற்றை வைத்திருந்தேன் என்று அவர் கூறினார்.
அவர் குளோபல் ராயல்டி டிரேடிங் எஸ்ஏஎல் நிறுவனத்தின் நிறுவனர் சமேர் ஹசிப் ஹலிமேவைக் குறிப்பிடுகிறார்.
குளோபல் ராயல்டி நிறுவனம் 2023இல், 43 நகைகளை மீட்க அல்லது அதன் மதிப்பாகக் கூறப்படும் 14.6 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையைப் பெற வழக்குத் தொடர்ந்தது.
2022ல் ஒரு நகை காவல்துறையினரால் நிறுவனத்திடம் திருப்பி அளிக்கப்பட்டது.
தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்த பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை உடனடியாகக் காலி செய்யுமாறு தனது குடும்பத்திற்கு உத்தரவிடப்பட்டதாக ரோஸ்மா கூறினார்.
ஶ்ரீ பெர்டானாவில் இருந்த எங்களின் 44 நகைகள் உட்பட அனைத்துப் பொருட்களும், தற்காலிக சேமிப்பு இடமாக பவிலியனுக்கு மாற்றப்பட்டன என்று அவர் கூறினார்.
ஶ்ரீ பெர்டானாவிலிருந்து வெளியேறிய சிறிது நேரத்திலேயே, போலிசார் பவிலியன் குடியிருப்பில் சோதனை நடத்தி, அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
சோதனை நடந்தபோது நாங்கள் பவிலியனில் இல்லை. பின்னர் நகைகளைச் சரிபார்க்கச் சென்றபோது, அவற்றில் பல காணாமல் போயிருந்தன என்று ரோஸ்மா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 5:45 pm
பொறியியல் நிறுவனத்திடமிருந்து பெர்சத்து கட்சிக்கு 800,000 ரிங்கிட் கிடைத்தது: வங்கி அதிகாரி
April 13, 2026, 5:43 pm
மக்களின் குரல்களும் கருத்துகளும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்: ரவீன்குமார்
April 13, 2026, 5:25 pm
முதலில் நட்பு, பிறகு காதல், இறுதியில் ஏமாற்றம்: காஜாங்கில் இயங்கிய லவ் ஸ்கேம் கும்பல் பிடிபட்டது
April 13, 2026, 4:28 pm
மாணவியைக் காலால் உதைத்துத் தள்ளிய மாணவன்: பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்குக் கேள்விக்குறி
April 13, 2026, 4:08 pm
உயர்கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'மெனு காசெ சிஸ்வா' உணவுத் திட்டம்
April 13, 2026, 3:44 pm
