நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொறியியல் நிறுவனத்திடமிருந்து பெர்சத்து கட்சிக்கு 800,000 ரிங்கிட் கிடைத்தது: வங்கி அதிகாரி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான  டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் மீதான ஊழல் வழக்கில், 2022 அக்டோபர் 12ஆம் தேதி நான்கு காசோலைகள் மூலம் கட்சியின் கணக்கில் 800,000 ரிங்கிட் வரவு வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் ஆறாவது அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜரான மே பேங்க் செயல்பாட்டு அதிகாரி சாங் ஹுய் லின் இதனை கூறினார்.

இந்த நிதி கேசிஜே இன்ஜினியரிங் நிறுவனத்திடமிருந்து வந்ததாக அவர்  சாட்சியமளித்தார்.

துணை அரசு வழக்கறிஞர் மஹாதி ஜுமாத்தின் முதன்மை விசாரணையின் போது,

​​நிறுவனத்தின் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்பட்டபடி, இந்த பரிவர்த்தனையில் தலா 200,000 ரிங்கிட் மதிப்புள்ள நான்கு காசோலைகள் சம்பந்தப்பட்டிருந்தது.

அவை அனைத்தும் ஒரே தேதியில் வரவு வைக்கப்பட்டதாக சாங் கூறினார்.

நிறுவனத்தின் கணக்குத் தொடக்க விண்ணப்பப் பதிவுகளின்படி, அதன் இயக்குநர்களாக சூல்ஹெல்மி மைரின்,  ஹபிஸாம் அப்துல் ஹலிம் ஆகியோரும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களாக இருந்ததாக அவர் கூறினார்.

நான்கு காசோலைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களே கையொப்பமிட்டிருந்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset