நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியா? தேசியக் கூட்டணியா?; மஇகா தலைமைத்துவம் நல்ல முடிவை எடுக்கும்: டத்தோ மோகன்

பூச்சோங்:

தேசிய முன்னணியா? தேசியக் கூட்டணியா? என்ற விவகாரத்தில் மஇகா தலைமைத்துவம் விரைவில் நல்ல முடிவை எடுக்கும்.

கேம்ப் வில்லேஜ் மஇகா கிளைத் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை கூறினார்.

கடந்த பேராளர் மாநாட்டில் மஇகா தேசியக் கூட்டணியில் இணையலாம்.

அது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயலவைக்கு வழங்கப்படும் என பேராளர்கள் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இந்த முடிவை எடுக்கும் தேசியக் கூட்டணியில் அரசியல் சூழ்நிலை வேறு. ஆனால் இப்போதைய சூழ்நிலை வேறு.

இதன் அடிப்படையில் தான் கடந்த மத்திய செயலவையில் மஇகா தற்போதைக்கு தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் என முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் மீண்டும் அடிமட்ட உறுப்பினர்களுடன் பேசிய பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என தேசியத் தலைவர் அறிவித்தார்.

இதன் அடிப்படையில் தற்போது அந்த பேச்சுவார்த்தைகளும் விவாதங்களும் நடந்து வருகிறது.

ஆக மஇகாவின் அரசியல் எதிர்காலம் குறித்து கட்சி தலைமைத்துவம் விரைவில் இறுதி முடிவை எடுக்கும்.

இந்த முடிவு கட்சியை தாண்டி சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் இருக்கும்.

பூச்சோங் கேம்ப் வில்லேஜ் உட்பட 5 கிளைகளின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ டி. மோகன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset