செய்திகள் மலேசியா
சமூக வலைதள நேரலையில் நேர்ந்த விபரீதம்: காரில் இருந்த பெண் மீது தாக்குதல்
சுங்கைப்பட்டாணி:
சமூக வலைதளத்தில் நேரலையில் (Live) பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர், கார் ஒன்றிற்குள் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உட்பட மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. பண்டார் லகுனா மெர்போக் பகுதியில் நேற்று மாலை இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்று மாலை சுமார் 5 மணி அளவில், பாதிக்கப்பட்ட பெண் தனது காரில் நேரலையில் இருந்தபோது, அங்கு வந்த மற்றுமொரு காரில் இருந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்தப் பெண்ணின் முகம், தலை, உடல் பகுதிகளில் சரமாரியாகத் தாக்கியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொலி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோலா மூடா மாவட்ட காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரையும், 29 வயதுப் பெண் ஒருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதேவேளையில், பாதிக்கப்பட்ட 28 வயதுப் பெண்ணும் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று நள்ளிரவு வெவ்வேறு இடங்களில் பிடிபட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
தனிப்பட்ட பகை அல்லது அத்துமீறல் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 2:10 pm
தேசிய முன்னணியா? தேசியக் கூட்டணியா?; மஇகா தலைமைத்துவம் நல்ல முடிவை எடுக்கும்: டத்தோ மோகன்
April 12, 2026, 11:57 am
சுபாங்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்; மனநல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:40 am
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:52 am
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
April 12, 2026, 10:51 am
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
April 12, 2026, 10:23 am
