செய்திகள் மலேசியா
சுபாங்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்; மனநல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
கோலாலம்பூர்:
சுபாங், கம்போங் மலாயு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யப்பட்ட பெண், தற்போது சிலாங்கூரில் உள்ள ஒரு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி அண்மையில் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவம் நடந்த இரவு, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்து சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அவரால் முறையான விளக்கங்களை அளிக்க முடியவில்லை என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் முஹம்மத் ஹபீஸ் முஹம்மத் நோர் தெரிவித்தார்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் மனநலம் குறித்த உறுதிப்பாட்டைப் பெற அவர் தற்போது மனநல வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்களின் வீடுகளை எப்போதும் பாதுகாப்பாகப் பூட்டி வைக்குமாறும், சாவிகளை கவனமாகப் பராமரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறு கவனக்குறைவுகள் தேவையற்ற விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 2:10 pm
தேசிய முன்னணியா? தேசியக் கூட்டணியா?; மஇகா தலைமைத்துவம் நல்ல முடிவை எடுக்கும்: டத்தோ மோகன்
April 12, 2026, 12:18 pm
சமூக வலைதள நேரலையில் நேர்ந்த விபரீதம்: காரில் இருந்த பெண் மீது தாக்குதல்
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:40 am
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:52 am
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
April 12, 2026, 10:51 am
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
April 12, 2026, 10:23 am
