நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் மஹிமாவும் வேறு வேறு அல்ல; இந்து சமயத்தையும் ஆலயத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் மஹிமாவும் வேறு வேறு அல்ல.

இந்து சமயத்தையும் ஆலயத்தையும் ஒருபோதும்  விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.

நாட்டில் எழும் ஆலயம், சமயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தேவஸ்தானம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

பல வழக்குகளை எடுத்து நடத்தி அதில் வெற்றியையும் கண்டுள்ளது.

ஆனால் சின்ன சின்ன விவகாரங்களுக்கு எல்லாம் என்னையும் தேவஸ்தானத்தையும் ஒரு சிலர் குறை கூறி வருகின்றனர்.

அப்படி பேசுபவர்கள் பத்துமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டை யாரும் பார்ப்பது இல்லை.

அதே வேளையில் இதை பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. இதனால் தான் தற்போது நான் சற்று  ஒதுங்கி  இருக்கிறேன்.

இருந்தாலும் மஹிமாவும் அதன் தலைவர் டத்தோ சிவக்குமாரும் அப்பணியை தொடர்கின்றனர்.

அதற்காக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் மஹிமாவும் வேறு வேறு அல்ல.  இரண்டும் ஒன்று தான்.

இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தேசிய கோவில் கருத்தரங்கை தொடக்கி வைத்த  டான்ஸ்ரீ நடராஜா இவ்வாறு கூறினார்.

ஆலய சர்ச்சைகள் தொடர்பில் அன்மையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

எனக்கும் அழைப்பு வந்தது. ஆனால் நான் கலந்து கொள்ளவில்ல.

காரணம் ஆலயத்திற்கு தொடர்பு  இல்லாதவர்கள் எல்லாம் ஆலயத்தை பற்றி பல பேசுகின்றனர்.

மேலும் தேவஸ்தானத்தையும் என்னையும் அவமதித்தவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒருவேளை அந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் அந்த கூட்டம் நடந்திருக்காது.

இந்த நல்ல நோக்கத்தில் தான் நான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset