செய்திகள் மலேசியா
இரவோடு இரவாக வீடிழந்த 8 பேர்
கோலா திரங்கானு:
நேற்றிரவு இங்குள்ள கம்போங் புலுக் காடிங், மனிரில் ஏற்பட்ட தீ விபத்தில் தங்கள் இல்லங்கள் அழிந்ததைத் தொடர்ந்து, டவுன் சிண்ட்ரோம் கொண்ட ஒரு சிறுமி உட்பட எட்டு பேர் கொண்ட ஒரு குடும்பம் தங்குமிடத்தை இழந்துள்ளது.
இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கோலா திரங்கானு தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் தியோயிபா தாயிப், இரவு 9.35 மணிக்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து ஒரு குழு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
"சம்பவ இடத்தை வந்தடைந்ததும், தீயணைப்புப் படை, இரண்டு வீடுகளைத் தீ சூழ்ந்திருப்பதைக் கண்டறிந்தது. சேதம் ஏறத்தாழ 90 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார் அவர்.
விரலில் காயமடைந்த பாதிக்கப்பட்டவர், மேலதிக சிகிச்சைக்காக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு (HSNZ) அனுப்பி வைக்கப்பட்டதாக தியோயிபா கூறினார்.
"நடவடிக்கை இரவு 11.51 மணிக்கு முடிவடைந்தது. சம்பவத்தின் காரணமும் மொத்த இழப்பும் இன்னும் விசாரணையில் உள்ளன" என்றார் அவர்.
இதற்கிடையில், 66 வயதுடைய வாஹித் அவாங், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன் தான் கட்டிய வீடு, கோலா நெருஸ், கோங் பாடக்கில் மற்றொரு வீட்டைக் கட்டிய பின்னர், தனது 37 வயதுடைய மகன் முஹம்மத் இஸாத், அவரது மனைவி, 8, 4 வயதுடைய இரண்டு மகன்கள் வசிப்பதற்காக வழங்கப்பட்டதாகக் கூறினார்.
அந்தச் சம்பவத்தின் போது, தனது மகன், மருமகள், இரண்டு பேரக்குழந்தைகள் கடற்கரைக்குச் சென்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.
"இந்தத் தீ குறித்து இரவு 9.30 மணிக்கு தொலைபேசி அழைப்பை நான் பெற்றேன். நான் வந்ததும், வீட்டின் அனைத்துப் பகுதிகளும் ஏற்கனவே எரிந்து சாம்பலாகிவிட்டன. அருகில் வசித்து வந்த என் சகோதரி 52 வயதுடைய நோர்ஹாஸ்லினாவின் வீடும் தீயில் கருகியது" என்று சம்பவ இடத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 11, 2026, 11:37 am
டீசல் மானியம் வேண்டி நாளை முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்: டோ டிரக் உரிமையாளர்கள் அறிவிப்பு
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
