செய்திகள் மலேசியா
டீசல் மானியம் வேண்டி நாளை முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்: டோ டிரக் உரிமையாளர்கள் அறிவிப்பு
கோலாலம்பூர்:
நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாட்களுக்கு டோ டிரக் (வாகனம் இழுக்கும்) சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தொழிலின் உரிமையாளர்கள், செயல்பாடுகளின் நிலைத்தன்மைக்காக அரசாங்கத்திடம் டீசல் மானியம் வழங்க வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் கிள்ளான் பள்ளத்தாக்கும் ஒன்றாகும் என்று காப்பீட்டு நிறுவனமான சூரிச் தக்காஃபுல் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த வேலைநிறுத்தம் தீபகற்பத்தில் உள்ள பிற மாநிலங்களையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதே அறிக்கையில், உள் டோ டிரக் செயல்பாட்டு நேரம் நீட்டிக்கப்படும் என்றும், திட்டமிடப்பட்ட சேவையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, சேவைச் செயல்பாட்டின் இடையூறு காரணமாக, வாடிக்கையாளர்கள் மூன்றாம் தரப்பினர் மூலமாகவும் தங்கள் சொந்த டோ டிரக்குகளை ஏற்பாடு செய்யலாம்.
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள், நிபந்தனைகளின் கீழ் திருப்பிச் செலுத்துதல் கோரப்படலாம்.
இதற்கிடையில், மலேசிய பொது தகாஃபுல் பிரதிநிதிகள் சங்கம் (பெர்வாத்தாம்), டோ டிரக் தொழில் முடங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, டீசல் மானிய வழிமுறையை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பெர்வாத்தாமின் தலைவர் டத்தோ கைரி அனுவார் அஹ்ம்மத் ஒரு அறிக்கையில், டோ டிரக் தொழில் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்கு மிகவும் யதார்த்தமான கொள்கை ஆதரவு அவசியம் என்று வலியுறுத்தினார்.
"அனைத்து தரப்பினரும் சமரசமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெர்வாத்தாம் வலியுறுத்துகிறது.
"எந்தவொரு மேலும் தாமதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது, மேலும் அது நிலைமையை மோசமாக்குவதோடு மலேசியாவில் காப்பீடு, தகாஃபுல் பாதுகாப்பு அமைப்பில் மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும்" என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், அனைத்து பொது காப்பீடு, தகாஃபுல் இயக்க நிறுவனங்களும், டோ உதவி ஆபரேட்டர்களுக்கான கட்டண விகிதங்களை உடனடியாக மதிப்பாய்வு செய்து சரிசெய்ய வேண்டும் என்றும் கைரி அனுவார் கோரினார்.
தற்போதுள்ள கட்டணங்கள் உண்மையான செயல்பாட்டுச் செலவுகளைப் பிரதிபலிக்காததாலும், கட்டணங்களைச் சரிசெய்யத் தவறுவது ஆபரேட்டர்கள் திறம்படச் செயல்படும் திறனைப் பாதிப்பதாலும், இது சேவை இடையூறுகள், களத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிகரித்த பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துவதாலும் இவ்வாறு கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 11, 2026, 11:19 am
இரவோடு இரவாக வீடிழந்த 8 பேர்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
