செய்திகள் மலேசியா
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
ஈப்போ:
தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி திருவிழா தண்டாயுதபாணி ஆலயத்தில் இந்த ஆண்டும் சிறப்பான முறையில் நடத்த ஆலய நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இவ்விழாவை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக கடைகள் இடம் மாற்றம் காணப்படும் என்ற அறிவிப்புகள் வெளியானதால் சர்ச்சை உருவானது.
இந்த விவகாரம் தொடர்பாக தெலுக் இந்தான் ஊராட்சி மன்றத் தலைவர் சைருள் அக்மால் காசிம்மிடம் பேச்சு வார்த்தை நடத்தி இந்த ஆண்டு வணிகர்கள் தற்காலிக கூடாரங்களை அதே இடத்தில் அமைக்க அனுமதியை பெற்றுள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார்.
எதிர்வரும் ஜூன் மாதம் தெலுக் இந்தான் சுற்றுலாத் தலமான (சாய்ந்த கோபுரம்) மணிகூண்டு மற்றும் அதன் வளாகம் பெரிய அளவில் உருமாற்றம் அடைவதற்கான மேம்பாட்டு பணி தொடங்கப்படவுள்ளதால் தற்காலிக கடைகள் அமைக்கப்படும் இடத்தை மூட திட்டமிட்டிருந்தது.
தற்காலிக வணிகக் கூடாரங்கள் பழைய இடத்திலிருந்து அங்குள்ள (OCBC) ஜாலான் மக்கோத்தாவுக்கு மாற்றப்பட திட்டம் இடப்பட்டிருந்தது.
இடமாற்றப் பிரச்சினை குறித்த தற்காலிக வியாபாரிகள், கடைகளைக் குத்தகைக்கு எடுக்கும் நபர்கள் அச்சத்தில் மூழ்கியிருந்தனர்.
இந்த வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
அடுத்தாண்டு ஊராட்சி மன்றம் தீர்மாணித்த புதிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று டத்தோ சிவநேசன் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி தற்காலிகக் கூடாரங்கள் இடமாற்றம் அவசியம் குறித்த மீண்டும் மீளாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
