நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா

கோலாலம்பூர்:

மஇகவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா அதன்  அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்.

மஇகா உதவித் தலைவர் டத்தோ முருகையா இதனை கூறினார்.

மஇகா தொடங்கப்பட்டு தற்போது 60 ஆண்டுகள் நிறைவை அமைந்துள்ளது.

இந்த 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை மஇகா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடவுள்ளது.

குறிப்பாக 9 திட்டங்களின் வாயிலாக இந்த 80ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது.

முதலாவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தான் இந்த மஇகா கட்சி தொடங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

இதே போன்று நாடு முழுவதும் நடத்தப்படும் பிரார்த்தனைகள் நடத்தப்படும்.

மஇகாவில் கிறிஸ்துவர்களும்  முஸ்லிம்  அன்பர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதனால் அவர்களின் வழியிலும் பிரார்த்தனைகளும் நடத்தப்படும்.

மஇகா உறுப்பினர்களின் டும்ப தின விழா நாடு முழுவதும் நடத்தப்படும்.

மேலும் மருத்துவ முகாம், ரத்த தானம், புற்றுநோய் பரிசோதனைகளும் நடத்தப்படும்.

கால்பந்து, கபடி, பூப்பந்து என விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும்.

கலை, கலாச்சார, பாரம்பரிய நிகழ்வுகளும் நடத்தப்படும்.

பேச்சு போட்டியுடன்  மக்களுடனான சிறப்பு சந்திப்பு கூட்டம் நடத்தப்படும். உச்சக்கட்டமாக மாபெரும் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்படும்.

மஇகா 80 ஆண்டுகாலமாக இந்த நாட்டிலேயே செயல்பட்டு வருகிறது.

மஇகாவின் சாதனைகள், போராட்டங்கள் ஆகியவற்றை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இது அமையும்.

வரு ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இவ்விழாக்கள் நடைபெறும் என்று டத்தோ முருகையா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset