செய்திகள் மலேசியா
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், மலேசியாவின் ஏழு கப்பல்களில் ஆறு ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து, மூல எண்ணெய் விநியோகத்தை இந்த நாட்டிற்குக் கொண்டு வரும் பயணத்தில் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த விநியோகத்தைக் கொண்டு சென்ற மற்றொரு கப்பல், சேதம் காரணமாக ஒரு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
அந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, இந்த மாதம், மே மாதத்திற்கான எண்ணெய் விநியோகம் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"பெட்ரோனாஸ் குழுமத்தின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரியுமான டான் ஸ்ரீ தெங்கு முஹம்மத் தௌஃபிக் சற்று முன் எங்கள் கப்பல்களின் பயணத்தின் வசதி, போக்குவரத்து குறித்த முன்னேற்றத்தை எனக்குத் தெரிவித்தார்.
"அல்ஹம்துலில்லா, அனைத்தும் கடந்துவிட்டன... ஒன்று ஏறக்குறைய வந்துவிட்டது, ஒன்று புறப்பட்டுவிட்டது. எங்கள் ஒரு கப்பல் மட்டும் சேதமடைந்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆறு பயணத்தில் உள்ளன.
"ஏப்ரல், மே மாதங்களுக்கான எண்ணெய் விநியோகம் இன்னும் மிகவும் கட்டுக்குள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
