செய்திகள் மலேசியா
ஆலய விவகாரத்தில் சண்டைகாரர்களிடம் தான் சண்டை போட வேண்டும்; அறிக்கை விடுவதால் மட்டும் தீர்வு கிடைக்காது: டத்தோ சிவக்குமார்
பத்துகேவ்ஸ்:
நாட்டில் எழுந்த ஆலய விவகாரத்தில் சண்டைகாரர்களிடம் தான் சண்டை போட வேண்டும்.
அதை விடுத்து அறிக்கை விடுவதால் மட்டும் தீர்வு கிடைக்காது என்று மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
ஆலயங்களை உடைப்பது உட்பட நாட்டில் இந்து ஆலயம், சமயம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன.
இதன் தொடர்ச்சியாக புத்ராஜெயாவில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
போலிஸ் அதிகாரிகளின் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடந்தது. பல தலைவர்கள் இக்கூட்டத்திற்கு வருவதாக கூறப்பட்டது.
இதனால் நானும் அங்கு சென்றேன். ஆனால் வருவதாக கூறிய பல தலைவர்கள் அங்கு வரவில்லை.
இருந்தாலும் இப்பிரச்சினைக்கு காரணமானவர்களுடன் பேசினோம். அவர்கள் செய்த தவற்றை சுட்டிக் காட்டினேன்.
பல வாக்குவாதங்களுக்கு பின் அவர்களுடன் கைகுலுக்கினேன். இதில் என்ன தவறு உள்ளது.
ஆலய விவகாரத்தில் சண்டைகாரர்களிடம் தான் சண்டை போட வேண்டும்.
அதை விடுத்து வீட்டில் அமர்ந்து கொண்டு அறிக்கை விடுவதால் மட்டும் எந்த தீர்வு கிடைக்காது.
ஆக சமூக வலைத் தளங்களில் எங்களை சாடுவதை விடுத்து விட்டு உருப்படியான செயல்களை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
அப்படி அடித்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
இதனிடையே ஆலய நிர்வாகங்கள் தேசிய நிலச் சட்டம், நகர, கிராம திட்டமிடல் சட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் தேசிய கோவில் கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது.
இதுவொரு தொடக்கம் தான். ஆலயப் பிரச்சினைகளை தீர்வு காண மஹிமா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 11, 2026, 11:37 am
டீசல் மானியம் வேண்டி நாளை முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்: டோ டிரக் உரிமையாளர்கள் அறிவிப்பு
April 11, 2026, 11:19 am
இரவோடு இரவாக வீடிழந்த 8 பேர்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
