செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
கோலாலம்பூர்:
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சன் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2025ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இந்த தேர்வில் 10ஏ எடுத்தால் நேரடியாக மெட்ரிகுலேசன் வாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
இதனால் மாணவர்கள் பல போராட்டங்களுக்கு மத்தியில் படித்து தேர்வை எழுதினர்.
ஆனால் இதில் என்ன அதிர்ச்சி என்றால் எஸ்பிஎம் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏ எடுத்த மாணவர்கள் நன்னெறி பாடத்தில் மட்டும் ஏ எடுக்கவில்லை.
ஒன்பது படங்களில் மட்டும் ஏ எடுத்ததால் அவர்களுக்கு மெட்ரிகுலேசன் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.
மலாய், ஆங்கிலம், அறிவியல், கணிதப் படங்களில் ஏ எடுத்த மாணவர்கள் நன்னெறி பாடத்தில் ஏ எடுக்கவில்லை.
இது அனைவருக்கும் அதிர்ச்சியும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே கல்வியமைச்சு இவ்விவகாரத்திற்கு உரிய விளக்கத்தை தர வேண்டும்.
மேலும் 9 ஏ எடுத்த மாணவர்களுக்கும் மெட்ரிகுலேசன் வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்று மஇகா கல்விக் குழு தலைவருமான டத்தோ நெல்சன் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
