நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்

கோலாலம்பூர்:

ரபிசி ரம்லி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை என்றார்.

கட்சியின் சட்ட விதியை மீறியது கண்டறியப்பட்டால், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற ரபிசி ரம்லியின் அழைப்பை அவர் ஏற்க மறுத்துள்ளார்.

கெஅடிலான் கட்சியிடமிருந்து சமீபத்திய விளக்கம் கோரும் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, தனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரபிசி இன்று எதிர்த்தார்.

இருப்பினும், பிரதமராகத் தனது முன்னுரிமை இப்போது நாட்டின் பொருளாதாரச் சவால்களைச் சமாளிப்பதில்தான் உள்ளது.

மேலு கட்சிக்குள்ளான உட்கட்சிப் பூசல்களில் அல்ல என்றும் அன்வர் வலியுறுத்தினார்.

ரபிசியின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டபோது, ​​தனிப்பட்ட பிரச்சனைகளை விட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் மிகவும் தீவிரமானவை என்பது சரிதான் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset