நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநிறுவன மாபியா விவகாரம்; எம்ஏசிசிக்கு தொடர்பில்லை: ஐஜிபி

கோலாலம்பூர்:

பெருநிறுவன மாபியா வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஈடுபடவில்லை.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமது காலித் இஸ்மாயில் இதனை உறுதிப்படுத்தினார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ளவர்கள் உட்பட, விசாரணைக்கு உதவுவதற்காக பல நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. விசாரணையின் முடிவுகள் இறுதி செய்யப்படும் வரை பொதுமக்கள் யூகங்களை வெளியிட வேண்டாம்.

உத்தரவிடப்பட்டபடி விசாரணை தொடரும் என்று அவர் புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்த விசாரணையில் வெளிநாட்டுத் தரப்பினரும் ஈடுபட்டுள்ளதால், ஜி2ஜி தொடர்புடைய முகமைகளுக்கும் இடையே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக, பெருநிறுவன மாபியாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தொழிலதிபர் விக்டர் சின்னுக்குச் சொந்தமான பல வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதை போலிஸ் உறுதிப்படுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset