செய்திகள் மலேசியா
ஜூன் மாதம் வரை மருந்து விநியோகம் சீராக இருக்கும்: சூல்கிப்ளி
புத்ராஜெயா:
நாட்டில் குறைந்தபட்சம் ஜூன் மாத இறுதி வரை நாட்டின் மருந்து விநியோகம் சீராக இருக்கும்.
சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ சூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.
உலகளாவிய செலவு அழுத்தங்கள் காரணமாக ஏற்படக்கூடிய கணிசமான விலை உயர்வை மக்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடையே கவலைகள் நிலவினாலும், அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தில் இதுவரை எந்த இடையூறும் ஏற்படவில்லை.
எங்களிடம் சொந்த கையிருப்பு மட்டுமல்ல, எங்களுக்கென சொந்தத் தொழிலும் உள்ளது என்பதால், நான் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
அதே சமயம் இது பீதியை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் விரும்புகிறேன்.
ஆனால் அதே நேரத்தில், இந்த விநியோகப் பிரச்சினையை மேலும் சரிசெய்ய நான் நடவடிக்கை எடுப்பேன் என்று இன்று இங்கு நடைபெற்ற உலக செவித்திறன் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மருந்துகள், மருத்துவ சாதனங்களின் விநியோகம் தொடர்ந்து சீராக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று நேற்று சுகாதார அமைச்சு அறிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
