செய்திகள் மலேசியா
குழந்தையின் தொடை, பிறப்புறுப்பில் காயம் ஏற்படும் வரை துன்புறுத்திய குற்றச்சாட்டுகளை கர்ப்பிணிப் பெண்ணும் அவரது தாயும் மறுத்தனர்
கோலாலம்பூர்:
ஒன்பது மாத கர்ப்பிணியான பணிப்பெண் ஒருவரும், அவரது தாயும் ஒரு சிறுமியின் தொடை, பிறப்புறுப்பில் காயங்களை ஏற்படுத்தும் அளவுக்குத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி மசுலியானா அப்துல் ரஷீத் முன்னிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட சரண்யா அருணாசலம் (28), அவரது தாய் சரோஜா ராமசாமி (64) ஆகியோர் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர்.
குற்றப்பத்திரிகையின்படி, குழந்தை தங்கள் பராமரிப்பில் இருந்தபோது பிப்ரவரி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் செராஸில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் இந்தச் செயலைச் செய்ததாக அவர்கள் இருவரும் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையைப் பொறுப்பில் வைத்திருந்த நபர்களாக, குற்றம் சாட்டப்பட்ட இருவரும், குழந்தையின் தொடை, பிறப்புறுப்புகளில் உடல் காயங்களை ஏற்படுத்தும் அளவிற்கு அக்குழந்தையைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
தன் குழந்தைக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்த பிறகு, பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை, இந்தச் சம்பவம் குறித்து போலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகத் தெரிகிறது. அவரே இந்த வழக்கில் புகார்தாரராகவும் உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும், 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(ஏ), தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இக்குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், 20,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
