நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு

போக்கோக் செனா:

கெடா, போக்கோக் செனா பகுதியில் இன்று காலை நிகழ்ந்த தீவிபத்தில், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கம்போங் பாரு, ஜாலான் பஞ்சோர் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் காலை 11.14 மணியளவில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட காங் பூன் ஓன் என்பவர், தனது தம்பி வெளியில் சென்றிருந்த வேளையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தீ பரவியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாகச் செயல்பட்டு வீட்டிற்குள் சிக்கியிருந்த முதியவரைப் பத்திரமாக வெளியே மீட்டனர். 

இச்சம்பவத்தில் முதியவரின் உடல் சுமார் 15 சதவீதம் கருகிய நிலையில், அவருக்குத் தீயணைப்புத் துறையின் அவசர மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்து, மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கடுமையான தீவிபத்தில் அந்த வீடு சுமார் 80 சதவீதம் எரிந்து சாம்பலானது. மேலும், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் 90 சதவீதம் சேதமடைந்தது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 14 தீயணைப்பு வீரர்கள், 17 தன்னார்வத் தீயணைப்பு வீரர்கள் இணைந்து, சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மலேசியக் காவல்துறை, தேசிய மின்சார வாரியத்தின் (TNB) ஒத்துழைப்புடன் இந்த மீட்பு நடவடிக்கை மதியம் 12.59 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தது. விபத்திற்கான காரணம், சேத மதிப்பு குறித்த விசாரணையைத் தீயணைப்பு, மீட்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset