செய்திகள் உலகம்
இந்தோனேசியக் கடலில் பரபரப்பு: டார்பிடோ வடிவிலான மர்மப் பொருள் கண்டுபிடிப்பு
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிலி டிராவங்கன்தீவு அருகே, டார்பிடோ (Torpedo) ஏவுகணைக்கு ஒப்பாக மர்மப் பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் முக்கிய வழித்தடமான லோம்போக் நீரிணையில், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உள்ளூர் மீனவர் ஒருவரால் இப்பொருள் அடையாளம் காணப்பட்டது.
சுமார் 3.7 மீட்டர் நீளமும் 65 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்த வினோதப் பொருள் குறித்து இந்தோனேசியக் கடற்படை தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முதற்கட்ட ஆய்வுகளின்படி, கண்டெடுக்கப்பட்ட பொருளில் வெடிபொருட்களோ அல்லது கதிர்வீச்சு அபாயங்களோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தப் பொருளில் உள்ள எழுத்துக்கள், சீனக் கப்பல் கட்டும் தொழில் கழகத்தால் (China Shipbuilding Industry Corporation) தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.
இது கடல் நீரோட்டத்தின் வேகத்தை அளவிடும் கருவியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம், தரவுகளைக் கண்டறிய இது ஜகார்த்தாவிற்கு மேலாய்வுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இது போன்ற வினோதப் பொருள்கள் இந்தோனேசியப் கடல் பகுதியில் கண்டெடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2021-ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு கருவி கண்டெடுக்கப்பட்டது.
நாட்டின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடற்படை உறுதியாக இருப்பதாகவும், முறையான அனுமதியின்றிப் பயன்படுத்தப்படும் இதுபோன்ற நீருக்கடியில் இயங்கும் கருவிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 12:58 pm
லாவோஸில் தங்கம் தேடச் சென்ற 7 பேர் குகையில் சிக்கினர்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
