நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடத்தல் சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்

பாசிர் பூத்தே: 

பொது இயக்கப் படையினால் (பி.ஜி.ஏ.) நேற்று இங்கு கிட்டத்தட்ட ரிம470,000 மதிப்பிலான 260,000 கடத்தல் சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற இரண்டு நெருங்கிய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்கிழக்கு படை பி.ஜி.ஏ. தளபதி, மூத்த உதவி ஆணையாளர் அஹமத் ராட்ஸி ஹுசைன், 26, 31 வயதுடைய அந்த இரண்டு உள்ளூர் ஆண்களும் கிளந்தான் ஓப் தாரிங் வாவாசன் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார்.

"பட்டாலியன் 9-ஐச் சேர்ந்த ஒரு பி.ஜி.ஏ. குழு, காலை 7 மணியளவில் பாசிர் பூத்தேயிலிருந்து கோங் கெலிஹ் நோக்கிச் செல்லும் பாதையில் இரண்டு சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த மல்ட்டி பர்ப்பஸ் வாகனங்களை (MPV) கண்டுபிடித்தது. பின்னர் அவை அந்த வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்தன.

"மேலும் சோதனையில், இரண்டு சந்தேக நபர்களும், கடத்தல் சிகரெட்டுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் பெட்டிகளுடன் வாகனங்களுக்குள் இருப்பது கண்டறியப்பட்டது.

"260,000 வெள்ளை சிகரெட்டுகளைக் கொண்ட 26 பெரிய பெட்டிகள் இருந்தன. அதன்பின், அந்த உறுப்பினர்கள் அனைத்து சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்" என்று அவர் கூறினார்.

வரி செலுத்தப்படாத அந்த சிகரெட்டுகள், திரங்கானு உட்பட உள்ளூர் சந்தைகளில் விநியோகிக்கப்படுவதாக நம்பப்படுவதாக அஹமத் ராட்ஸி தெரிவித்தார்.

இரண்டு சந்தேக நபர்களும் 'ரன்னர்களாக' செயல்பட்டதாக நம்பப்படுவதாகவும், ஒரு உள்ளூர் ஆணால் ஒவ்வொரு பயணத்திற்கும் RM200 செலுத்தப்பட்டதாக ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

"அந்த சிகரெட்டுகள் கோத்தா பாருவில் உள்ள ஒரு சப்ளையரிடமிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், தேவைக்கு ஏற்ப அவை கட்டமாக விநியோகிக்கப்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

பெரோடுவா அல்சா, புரோட்டான் எக்ஸோரா ஆகிய இரண்டு வாகனங்களும் அந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டதாக ராட்ஸி கூறினார்.

"வாகனங்கள், சிகரெட்டுகள் உட்பட மொத்த பறிமுதல் மதிப்பு ரிம508,000 என மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார் அவர்.

மேலதிக நடவடிக்கைக்காக, இரண்டு சந்தேக நபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் பாசிர் பூத்தே மாவட்ட போலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

1967 ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின் பிரிவு 135(1)(e)-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாநிலத்தில் சட்டவிரோத சிகரெட்டுகள் விநியோகிப்பதை ஒழிப்பதற்காக, பி.ஜி.ஏ. தொடர்ந்து கண்காணிப்பு, அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் என்று அஹமத் ராட்ஸி கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset