நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தங்கா பத்துவில் திறந்தவெளி எரிப்பு

மலாக்கா: 

தங்கா பாத்து பகுதியைச் சுற்றியுள்ள ஒரு புதர் நிலத்தில் மர அடுக்கு திறந்த வெளியில் எரிக்கப்பட்டதாகக் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுச்சூழல் துறை (ஜாஸ்) பொதுமக்களிடமிருந்து ஒரு புகாரைப் பெற்றதைத் தொடர்ந்து, அந்தச் செயல்பாடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் புகாரைத் தொடர்ந்து, மலாக்கா மாநில ஜாஸ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதாகவும், அங்கு நிலத்தை அழிக்கும் நடவடிக்கைகளின் விளைவாக நம்பப்படும் ஒரு பெரிய அளவிலான மர அடுக்கு இருப்பதாகவும், அது இன்னும் புகைந்து கொண்டிருந்ததாகவும், முழுமையாக அணைக்கப்படவில்லை என்றும் ஜாஸ் தெரிவித்துள்ளது.

1974 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் பிரிவு 29A-ன் கீழ், சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிரிவு 31, பிரிவு 37-ன் கீழ் அறிவுறுத்தல் நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் ஜாஸ் கூறியுள்ளது.

"அதே செயல்பாடு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, உன்னிப்பான கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

"திறந்த வெளி எரிப்பில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருடனும் ஜாஸ் சமரசம் செய்து கொள்ளாது, ஏனெனில் இது காற்றின் தரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும்" என்று அது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எந்தவொரு மாசுபாட்டு நடவடிக்கையையும் கண்டறிந்தால், உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, பொதுமக்கள் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அது மேலும் கூறியது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset