செய்திகள் மலேசியா
தொடரும் எல்.ஆர்.டி சீரமைப்புப் பணிகள்: பயணிகளின் வசதிக்காக மாற்று இரயில் சேவை அறிவிப்பு
கோலாலம்பூர்:
சான் சோவ் லின் (Chan Sow Lin) இரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தண்டவாள இணைப்பு கோளாறு காரணமாக, அம்பாங், ஸ்ரீ பெட்டாலிங் இடையிலான எல்.ஆர்.டி (LRT) வழித்தடத்தில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இப் பணிகள் முடியும் வரை பயணிகளின் வசதிக்காக மாற்று இரயில் சேவைகள் வழங்கப்படும் என ராபிட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய மாற்றங்களின்படி, அம்பாங் நிலையத்திலிருந்து வரும் இரயில்கள் சான் சோவ் லின் நிலையத்துடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் திரும்பிச் செல்லும்.
இதற்கான இரயில் வருகை இடைவெளி 6 நிமிடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளது. அம்பாங் நோக்கிச் செல்பவர்கள், அம்பாங்கிலிருந்து செந்தூல் தீமூர் நோக்கிச் செல்பவர்கள் சான் சோவ் லின் நிலையத்தின் குறிப்பிட்ட தளங்களில் இரயில் மாறிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதேவேளையில், செந்தூல் தீமூர் முதல் புத்ரா ஹைட்ஸ் வரையிலான இரயில் சேவைகள் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம் போல் இயங்கும்.
முன்னதாக, அவான் பெசார், ஸ்ரீ பெட்டாலிங் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மின் விநியோகத் தடையால் இரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு, மாற்று இரயில்களுடன் இலவச பேருந்து சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு வழிகாட்டவும் உதவிகள் புரியவும் பாதிக்கப்பட்ட நிலையங்களில் கூடுதல் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பயணிகள் தங்களின் பயணத்தைத் தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக, ராபிட் கே.எல் (Rapid KL) சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது 'மை-ராபிட் பல்ஸ்' (MyRapid PULSE) செயலி வாயிலாக அவ்வப்போது வெளியாகும் உடனுக்குடனான தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
