நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களை நன்றியுடன் இருக்குமாறு கேட்பதை விடுத்து, பிரதமர் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: டோமினிக்

கோலாலம்பூர்:

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதையோ அல்லது நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறி மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது.

அதை விடுத்து  மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனம் செலுத்த வேண்டும் என்று கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.

மக்கள் நன்றியுடன் இருக்குமாறு அழைப்பு விடுக்கத் தேவையில்லை.

மாறாக, செயல்திறன், முடிவுகள்,  நிர்வாகத்தில் உள்ள நேர்மை ஆகியவற்றின் மூலம், அரசாங்கம் உண்மையிலேயே பாராட்டப்படுவதற்குத் தகுதியானது என்பதை நிரூபிக்க வேண்டும்.

விலை உயர்வுகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, பொதுச் சேவைகளை மேம்படுத்தி, ஊழலை எதிர்த்துப் போராடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஒரு அரசாங்கம், கேட்காமலேயே மக்களின் பாராட்டை இயல்பாகப் பெறும்.

இருப்பினும், இந்த அடிப்படை விஷயங்கள் செயல்படுத்தப்படத் தவறினால், மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற அழைப்பு, நிர்வாகத்தின் பலவீனங்களை மூடிமறைக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும்.

செயல்திறனற்ற கொள்கைகளின் விளைவுகளைச் சுமப்பவர்களும், பணவீக்கத்தின் விலையைக் கொடுப்பவர்களும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் தொடர்ந்து நம்பிக்கை வைப்பவர்களும் மக்கள்தான் என்பதால், அரசாங்கம் முதலில் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset