நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பன்றி முடி சிக்கியிருந்த பிரஷ்; சந்தையில் உள்ள 70% பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன

மலாக்கா: 
பன்றி முடி சிக்கியிருந்த பிரஷ் சர்ச்சையில் சிக்கியிருந்த காபி, பிஸ்கட் நிறுவனத்தின் சுமார் 70 சதவீதப் பொருட்கள் சந்தையிலிருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.

ஜாய்ம் எனப்படும் மலாக்கா இஸ்லாமிய மதத் துறையின் ஹலால் மேலாண்மைப் பிரிவு இதனை கூறியது.

ஹெங் லூங் காபி நிறுவனம், தியான் ஹப் செங் பிஸ்கட் நிறுவனம் ஆகியவற்றின் தயாரிப்புகளை அதிகாரிகளை அகற்றியுள்ளனர்.

நாடு தழுவிய அளவில் மீதமுள்ள பொருட்களைத் திரும்பப் பெறும் பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 8 ஆம் தேதி நிலவரப்படி, மலாக்காவில் உள்ள 33 பல்பொருள் அங்காடிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின் முடிவுகளில், பாதிக்கப்பட்ட பொருட்கள் எதுவும் அந்த வளாகங்களில் கண்டறியப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்தத் திரும்பப் பெறும் உத்தரவு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கண்காணிப்பு அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கை கூறியது.

முன்னதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முஸ்லிம் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதுடன், உரிய நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்வதற்காகவே மலேசிய ஹலால் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டது என்று ஜாய்ம் வலியுறுத்தியிருந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset