நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோ சிறையிலிருந்து தப்பிய பாகிஸ்தான் ஆடவரை போலிஸ் தேடி வருகிறது

சுங்கைபூலோ:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிய பாகிஸ்தான் ஆடவரை போலிஸ் தேடி வருகிறது.

சுங்கை பூலோ போலிஸ் தலைவர் முஹம்மது ஹபிஸ் முஹம்மது நூர் இதனை கூறினார்.

24 வயதான முகமது ஹசன் கடைசியாக ஆரஞ்சு நிற டி-சட்டை,  கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்ததாகக் கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377சி, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 392, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-இன் பிரிவு 14(டி),  (ஏ), குடிவரவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 15(1)(செ) ஆகியவற்றின் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்த நபர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு போலிஸ் அறிவுறுத்துகிறது.

கைதியின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தால், விசாரணை அதிகாரி சி. முஹேந்திரனை 010-430438 அல்லது சுங்கை பூலோ போலிஸ் நிலையத்தை 03-61561222 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு  அவர் கேட்டுக் கொன்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset