நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோ ஒமார், அனுவார் மூசா அம்னோவிற்குத் திரும்ப மறுப்பு

கோலாலம்பூர்:

முன்னாள் அம்னோ தலைவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவதற்கான கதவு அகலமாகத் திறக்கப்பட்டிருந்தாலும் பலர்  திரும்புவது கிட்டத்தட்ட உறுதியாகாமல் உள்ளது.

அவர்களில் முன்னாள் சிலாங்கூர் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ நோ ஒமாரும் ஒருவர் ஆவார். அவர் கட்சிக்குத் திரும்புவதற்காகக் கடுமையாகப் போராடியதாகக் கூறப்படுகிறது.

நோ ஒமாருக்கு நெருக்கமான ஒரு தகவலின்படி,  முன்னாள் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் அம்னோ திரும்பும் மனப்பான்மையில் இருக்கிறார்,

ஆனால் ஜசெகஉள்ளடக்கிய தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி உடனான கூட்டணி, கட்சியில் மீண்டும் இணையும் அவரது விருப்பத்தை தள்ளிப்போட வைத்துள்ளது.

ஜசெகவை விரும்பாத கொள்கையின் காரணமாக அவர் அம்னோவிற்குத் திரும்ப மாட்டார் என்பது இதுவரை தெளிவாகத் தெரிகிறது.

இதே போன்று வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற இடத்திற்குப் போட்டியிட ஒரு சிறந்த வாய்ப்பைக் காண்பதால், டத்தோஶ்ரீ அனுவார் மூசா பாஸ் கட்சியுடன் தொடர்ந்து உறுதியாக நிற்பதாக அறியப்படுகிறது.

மேலும், அனுவார் மூசாவுக்கும் டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடிக்கும் இடையிலாக உறவு  அவ்வளவு நன்றாக இல்லை என தெரிகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset