நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 5 பில்லியன் ரிங்கிட் வரையிலான குறைந்த செலவிலான நிதியுதவி: ஸ்டீவன் சிம்

ஜார்ஜ்டவுன்:

சிறு, நடுத்தர நிறுவனங்களின்  வளர்ச்சி, மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், 5 பில்லியன் ரிங்கிட் வரையிலான குறைந்த செலவிலான நிதியுதவி திட்டம் அமலுக்கு வருகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை அறிவித்தார்.

3% முதல் 5% வரையிலான குறைந்த வட்டி விகிதங்களில் இந்த நிதி  வழங்கப்படும்.

உயர் தொழில்நுட்ப செயல்பாடுகள், பசுமைப் பொருளாதாரம், மாற்றம், தானியங்குமயமாக்கல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கும், சுற்றுலாத் துறையைத்  மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

இந்த நிதி, எனது அமைச்சின் கீழ் உள்ள பேங்க் ரக்யாட்,  எஸ்எம்இ வங்கி உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்ற வங்கிகள், நியமிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள், வளர்ச்சி நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்.

பினாங்கில் உள்ள சிறு, நடுத்தர நிறுவனங்கள், பாரம்பரிய வணிகங்கள் உட்பட, இந்த வசதியையும், வணிகங்களை மேம்படுத்தும் அரசாங்கத்தின் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் நாம் அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பது மட்டுமல்லாமல், பெரியதாகவும், சிறந்ததாகவும், உயர்ந்ததாகவும் இருக்க முடியும் என்று அவர் பினாங்கின் பாரம்பரிய வணிக முத்திரை என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கூறினார்.

பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, ஓராண்டு கால முயற்சியான PowerUp10K பிரச்சாரத்தின் மூலம், அவற்றை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் ஸ்டீவன் சிம் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset