நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பூலோ சிறையிலிருந்து சிறுவர் வன்கொடுமைக் கைதி தப்பியோட்டம்

கோலாலம்பூர்: 

சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு இளைஞர் ஒருவர் நேற்று சிறையிலிருந்து தப்பியோடியுள்ளார். 

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி விசாரணையை எதிர்நோக்கியிருந்த முஹம்மத் ஹசன் என்பவரே இவ்வாறு தப்பியோடியவர் ஆவார். இவரைக் கண்டுபிடிப்பதற்குச் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது.

கடைசியாகப் பார்க்கப்பட்டபோது, அவர் ஆரஞ்சு நிற சட்டையும், கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்திருந்ததாகச் சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் முஹம்மத் ஹபீஸ் முஹம்மத் நோர் தெரிவித்துள்ளார். 

தப்பியோடிய இந்த நபர் மீது பாலியல் குற்றங்கள், வழிப்பறி, குடிவரவுச் சட்ட மீறல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றப் பின்னணியைக் கொண்டவர் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நபர் குறித்த ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சி. முகேந்திரன் (010-4304383) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பவோ அல்லது தேவையற்ற ஊகங்களை உருவாக்கி மக்களின் அச்சத்தை அதிகரிக்கவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்குக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset