செய்திகள் உலகம்
வளைகுடா அமைதிக்காக கைகோர்க்கும் அமெரிக்க - ஈரான் பிரதிநிதிகள்
இஸ்லாமாபாத்:
அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையிலான நீண்டகாலப் பகைமையைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று (ஏப்ரல் 10, 2026) உயர்மட்டப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, இந்த நேரடிச் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையில், ஈரானின் 10 அம்சத் திட்டம் முதன்மையான விவாதப் பொருளாக அமையவுள்ளது. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடு, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல், பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஈரானின் அணுசக்தித் திட்டம், ஏவுகணைச் சோதனைகள் குறித்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இச்சந்திப்பில் அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தலைமையிலான குழுவும் பங்கேற்கின்றன.
இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை சுமார் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும், இதன் மூலம் வளைகுடா பிராந்தியத்தில் ஒரு நிரந்தரப் போர்நிறுத்தத்தை எட்ட இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளின் பிரதிநிதிகளும் தங்கும் இடங்கள், பேச்சுவார்த்தை நடைபெறும் ராணுவத் தளத்தைச் சுற்றி பாகிஸ்தான் அரசு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்கால அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 12:58 pm
லாவோஸில் தங்கம் தேடச் சென்ற 7 பேர் குகையில் சிக்கினர்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
