செய்திகள் சிந்தனைகள்
புன்னகைக்க மறக்காதீர்கள்: வெள்ளிச் சிந்தனை
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருக்கும்போது புன்னகை செய்யுங்கள். ஏனெனில், குடும்பத்திற்காக ஏங்குபவர்கள் பலர் உள்ளனர்.
வேலைக்குச் செல்லும்போது புன்னகை செய்யுங்கள். ஏனெனில், பலர் இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக புன்னகை செய்யுங்கள். ஏனெனில், நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை விலைக்கு வாங்க எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
நீங்கள் உயிருடன் இருப்பதாலும், உங்களுக்கான வாழ்வாதாரம் இன்னும் வழங்கப்படுவதாலும் புன்னகை செய்யுங்கள். ஏனெனில், இறந்தவர்கள் நற்செயல்கள் புரிய உயிருடன் இருக்க விரும்புவார்கள்.
வணங்குவதற்கு ஏகனாகிய அல்லாஹ் இருக்கிறான் என்பதற்காக புன்னகை செய்யுங்கள். ஏனெனில், இங்கே பலரும் பசுக்களை வணங்குகிறார்கள்.
நீங்கள் நீங்களாக இருப்பதற்காக புன்னகை செய்யுங்கள். ஏனெனில், மற்றவர்கள் உங்களைப் போல் இருக்க விரும்புகிறார்கள்.
புன்னகை.. மொழி கடந்த ஒர் அழகான உணர்வு. இது ஒருவரின் முகத்திற்குப் பொலிவைத் தருகிறது. சுற்றி இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைப் பரப்புகிறது.
சொல்ல மறந்துவிட்டேன்… "புன்னகையும் ஒரு தர்மம்” என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
