செய்திகள் உலகம்
பிரான்ஸின் உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயது இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் நகரசபை உறுப்பினராகத் தேர்வு
பாரிஸ்:
பிரான்ஸின் கயன்கோர்ட் உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயது இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக, அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
மன்னார், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸில் பிறந்த பிலால் லுக்மான், தற்போது பாரிஸ்-பந்தியோன்-அசாஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்ட மாணவராகப் பயில்கிறார்.
மார்ச் 15, 22 ஆம் தேதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் நகராட்சித் தேர்தல்களில், அவர் தனது கன்னி வாக்கைப் பதிவு செய்த அதேவேளை, வேட்பாளராகவும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது பதவியில் உள்ள மேயரின் அணியில் இணைந்து அவர் இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 2:12 pm
10,000 மடங்குத் துல்லியமாகப் புற்றுநோயைக் கண்டறியும் புதிய கையடக்கக் கருவி
May 26, 2026, 12:58 pm
லாவோஸில் தங்கம் தேடச் சென்ற 7 பேர் குகையில் சிக்கினர்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
