நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் (House of Lord -UK-Parliament-London) முனைவர் பட்டம் பெற்றார் முஹம்மத் ஃபசூல் ஜிப்ரி

லண்டன்:

இலங்கையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான முனைவர் ஃபசூல் ஜிப்ரி ஏப்ரல் 28-ஆம் தேதி இங்கிலாந்து பாரளுமன்றத்தில் (House of Lord -UK-Parliament-London) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போது முனைவர் பட்டம்  (PhD Doctorate Degree) வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இங்கிலாந்து  பாராளுமன்றத்தில் உலக அளவில் மிக முக்கியமானவர்களே கௌரவிக்கப்படுகின்றனர். இதன் போது உலக அளவில் ஆய்வுகளை மேற்கொண்ட 150 பேர் பல நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தோடு அவர்களுள் டாக்டர் அல்ஹாஜ் முஹம்மத் ஃபசூல் ஜிப்ரி அவர்களும் தெரிவு செய்யப்பட்டு PhD Doctorate Degree வழங்கி கௌரவிக்கப்பட்டார்  

அவர்  THESIS ON   CLIMATE CHANGE & HUMAN RESPONSIBILITY என்ற தலைப்பில் அமைந்திருந்தது.

இவரது சமூகப்பணிகளுக்காக சர்வதேச ரீதியில் பல்வேறு கௌரவ விருதுகளை பெற்றுள்ளார். 

மள்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியில் கல்வியை ஆரம்பித்து யாழ்ப்பாண மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடர்ந்து ஒரு பட்டயக்கணக்காளராக சிங்கப்பூரில் தனது பயணத்தை ஆரம்பித்து தனது உழைப்பாலும் முயற்சியாலும் சர்வதேச அளவில் சாதனைகள் பல புரிந்த ஒரு சிறந்த வர்த்தகராக உயர்ந்தார்.

சிங்கப்பூர்,  ஆஸ்த்திரேலியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசித்து வரும் அவர் பல்வேறு நிறுவனங்களின் நிறுவனராகவும் இயக்குநராகவும் தலைமை அதிகாரியாகவும் கல்வியாளராகவும் உள்ளார். 

ஸஹரா நிதியம் என்ற அமைப்பை உருவாக்கிஅதன் மூலம் சர்வதேச ரீதியில் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் சமூக அறப்பணிகளையும் செய்து வருகின்றார். 

முனைவர் பட்டம் பெற்ற ஃபசூல் ஜிப்ரி அவர்களுக்கு நம்பிக்கையின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

- ஃபிதா

​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset