செய்திகள் கலைகள்
ஆர்யாவின் தன் 40-வது திரைப்படத்தில் இரு நாயகிகள்
சென்னை:
நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன.
தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஏப். 17 ஆம் தேதி மிஸ்டர். எக்ஸ் வெளியாகிறது.
அடுத்ததாக இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் தன் 40-வது திரைப்படத்திற்காக ஆர்யா தயாராகி வருகிறார். இதில், நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஆர்யா, “நான் தயாரிக்கும் என்னுடைய 40-வது திரைப்படம் ராஜா - ராணி படம் போல் நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான படமாக உருவாகவுள்ளது. இதில், நீண்ட காலம் கழித்து இரண்டு நாயகிகளுடன் இன்றைய தலைமுறைக்கான காதல் படத்தில் நடிக்கிறேன். எனக்கு சரியான நாயகிகள் அமைவதில்லை என்பதால் இப்படத்தில் சண்டையிட்டு 2 நாயகிகளுடன் மட்டுமே பேசுவது போல் நடித்துக்கொண்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்யா இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா - 2 படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
