செய்திகள் மலேசியா
200,000 ரிங்கிட் இலஞ்ச விசாரணையில் பெர்லிஸ் அரசு ஊழியர் கைது
கங்கார்:
2024 ஆம் ஆண்டில் ஒரு சங்கத்திடமிருந்து பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் பெறுவது தொடர்பாக சுமார் 200,000 ரிங்கிட் இலஞ்ச வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில், பெர்லிஸைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர் இன்று முதல் ஐந்து நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்..
57 வயதான அந்த ஆணுக்கான கைது உத்தரவு, இன்று பெர்லிஸ் எஸ்.பி.ஆர்.எம்.-இன் மனுவைத் தொடர்ந்து, கங்கார் மாஜிஸ்திரேட் நூருல் நடாஷா ரிஸால் அவர்களால் வழங்கப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்.) தெரிவித்தது.
சந்தேக நபர் நேற்று மதியம் 2.40 மணிக்கு, இங்குள்ள எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்தில் தனது வாக்குமூலத்தை அளித்த பின்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் பெர்லிஸ் தலைமை ஆணையராகப் பணியாற்றிய போது, நபர்களுக்கு விருதுகளை வழங்குவதை எளிதாக்குவதற்காக, 2024 ஆம் ஆண்டில் அவர் அந்தப் பணத்தைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
"விருதுகளைப் பெறுவதற்காக சந்தேக நபருக்குப் பணம் செலுத்திய நபர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் விசாரணையில் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெர்லிஸ் எஸ்.பி.ஆர்.எம். இயக்குநர் முஹம்மத் நோர் அதா அப் கானி, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த வழக்கு எஸ்.பி.ஆர்.எம். சட்டம் 2009-ன் பிரிவு 16-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
