செய்திகள் மலேசியா
முதலீடு என்ற பெயரில் மோசடி: இணையத் தோழியை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த 70 வயது முதியவர்
கோலாலம்பூர்:
தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி போல நடித்து, பொதுமக்களிடம் நட்பை வளர்த்துப் பின்னர் முதலீட்டு மோசடிகளில் ஈடுபடும் புதிய வகை கும்பல் குறித்து புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்முறையைப் பயன்படுத்தி, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரிடமிருந்து RM2,23,000 ரிங்கிட் பணத்தை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத பெண் ஒருவரிடமிருந்து வந்த 'தவறான' வாட்ஸ்அப் செய்தியே இந்த மோசடிக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.
அந்தப் பெண் முதியவருடன் அடிக்கடி பேசி நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகு, இணையம் வழியாகப் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய முதியவர், கடந்த பிப்ரவரி 13 முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை, பல்வேறு நிறுவனங்களின் பெயரிலான ஆறு வங்கி கணக்குகளுக்கு ஒன்பது தவணைகளாக மொத்தம் நூதனப் RM2,23,000 ரிங்கிட் பணத்தை அனுப்பியுள்ளார்.
மார்ச் 7-ஆம் தேதி, ஈட்டிய லாபத்தை எடுக்க வேண்டுமானால் உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு (LHDN) வரி செலுத்த வேண்டும் எனக் கூறி, கூடுதலாக RM2,12,398 ரிங்கிட் பணத்தை அந்தப் பெண் கேட்டுள்ளார்.
கூடுதல் பணம் கேட்கப்பட்டதால் சந்தேகமடைந்த முதியவர், தனது மனைவி, பிள்ளைகளுடன் ஆலோசித்த பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கடந்த மார்ச் 9-ஆம் தேதி போலிசில் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது தண்டனைச் சட்டம் 420-வது பிரிவின் கீழ் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இணையம் வழியாக அறிமுகமாகும் நபர்களை நம்பிப் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்றும், தெரியாத நபர்களுக்குப் பணத்தை அனுப்பும் முன் உரியச் சரிபார்ப்புகளை மேற்கொள்ளுமாறும் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
