செய்திகள் மலேசியா
“மலேசியாவில் மீன் தட்டுப்பாட்டிற்கு வாய்ப்பில்லை”: டத்தோ அட்னான் ஹுசைன் அறிவிப்பு
ஈப்போ:
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி அல்லது போர்ச் சூழல் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கினாலும், நாட்டின் மீன் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான இருப்பு அடுத்த மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக உள்ளது.
உள்நாட்டுப் புரதச் சத்துத் தேவையில் எவ்விதத் தடங்கலும் ஏற்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மீன்வளத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அட்னான் ஹுசைன் தெரிவித்தார்.
ஒருவேளை மிக மோசமான சூழல் ஏற்பட்டால், அந்த இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பை (Aquaculture) அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஏ, பி, சி மண்டல மீனவர்களுக்கு வழங்கப்படும் அரசாங்க மானியங்களின் உதவியுடன் மீன்பிடித் தொழில் வழக்கம் போல் சீராக நடைபெற்று வருகிறது.
இருப்பினும், எரிபொருள் மானியம் பெறாத சி-2 மண்டல மீனவர்கள், செலவு அதிகரிப்பு காரணமாகத் தொழிலை நிறுத்தும் அபாயத்தைச் சந்தித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடல் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டால், அதற்கு மாற்றாக நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறை நாட்டின் மீன் தேவையை ஈடுகட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டில் மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்பு சீராக இருப்பதால், பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், பதற்றமடைந்து பொருட்களைக் குவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் அறிவுறுத்தினார்.
வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றங்கள், உலகளாவிய சூழல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
