செய்திகள் மலேசியா
நங்கூரக் கயிற்றில் சிக்கி ஆண் உயிரிழந்தார்
தாவாவ்:
இன்று அதிகாலையில் இங்குள்ள மீன் சந்தைத் துறைமுகத்தில் ஒரு கப்பலின் நங்கூரக் கயிற்றில் சிக்கியதாக நம்பப்படும் ஒரு ஆண் உயிரிழந்தார்.
காலை 3.35 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 40 வயதுடைய பாதிக்கப்பட்டவர், மருத்துவக் குழுவினரால் சம்பவ இடத்திலேயே இறந்ததாக உறுதி செய்யப்பட்டார்.
தாவாவ் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் (BBP) ஜெமிஷின் உஜின், பாதிக்கப்பட்டவரை மீட்பதற்கு உதவும் வகையில், ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அனுப்புவதற்கு முன், தாவாவ் மாவட்ட போலிஸ் தலைமையகத்திடமிருந்து (IPD) அவசர அழைப்பைத் தாம் பெற்றதாகத் தெரிவித்தார்.
"தீயணைப்புப் படை, நிலையத்திலிருந்து சுமார் 1.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு காலை 3.38 மணிக்கு வந்தடைந்தது. மேலும், கப்பலின் நங்கூரக் கயிற்றில் பாதிக்கப்பட்டவர் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தது. சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி கயிற்றை வெட்டி, பாதிக்கப்பட்டவரை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர், பின்னர் ஒரு ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்தி கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டார். மேலதிக நடவடிக்கைக்காக அவர் போலிஸிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
