நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் வன்கொடுமை குற்றங்களை குழந்தைகள் காப்பகப் பராமரிப்பாளர் ஒப்புக்கொண்டார்

அம்பாங்:

கோம்பாக், பத்து கேவ்ஸில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகப் பராமரிப்பாளர், ஐந்து சிறுவர்களுக்கு எதிராக உடல் ரீதியான, உடல் ரீதியற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான 15 குற்றச்சாட்டுகளை இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்டவரான 25 வயதான ரத்தினவேலு, நீதிபதிகள் நோர்ஷிலா கமரூடின்,  ஹோ குவாங் சின் ஆகியோர் முன்னிலையில், ஒரு மொழிபெயர்ப்பாளரால் அனைத்து குற்றச்சாட்டுகளும் தமிழில் வாசிக்கப்பட்ட பின்னர் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தார்.

அனைத்து குற்றச்சாட்டுகளின்படி, எட்டு முதல் 13 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்களுக்கு எதிராக  பாலியல் வன்கொடுமை  செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றம், பத்து கேவ்ஸில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில்,  கடந்த 2025 நவம்பர் மாத இறுதிக்கும் இந்த ஆண்டு மார்ச் 27க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்துள்ளது.

குழந்தைகள் பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-இன் பிரிவுகள் 14(ஏ), 14(பி), 15(ஏ)(ஐ), 15 (ஏ)(ii) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377சி ஆகியவற்றின் கீழ் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

பிரிவுகள் 14(ஏ), 14(பி) ஆகியவை அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, பிரம்படிக்கு வழிவகுக்கின்றன, .

தேசமயம் பிரிவுகள் 15(ஏ)(ஐ), 15(ஏ)(ii) ஆகியவை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 20,000 ரிங்கிட்டுக்கு மிகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழிவகுக்கின்றன.

பிரிவு 377 சி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிக்கு வழிவகுக்கிறது.

வழக்கின் விவரங்கள், மே 21 அன்று தீர்ப்பு வரும் வரை, குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

அதே விசாரணையின் போது ​​சம்பந்தப்பட்ட  குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர் 31 வயதான எஸ். வேலன், நான்கு உடல்ரீதியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்குத் தான் குற்றமற்றவர் என வாதிட்டார்.

நீதிபதி நோர்ஷிலா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் இந்த வாதத்தை முன்வைத்தார்.

அதே நேரத்தில் ஒரு குற்றச்சாட்டு நீதிபதி குவாங் சின் முன்னிலையில் தமிழில் வாசிக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் 30,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க அனுமதித்ததுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஜூன் 10ஆம் தேதியை நிர்ணயித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset