செய்திகள் மலேசியா
அவதூறு வழக்கு நஜிப்பின் அரசியல் வாழ்க்கையை அழிக்கும் நோக்கம் கொண்டதல்ல: சூல்கிப்ளி
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் அரசியல் வாழ்க்கையை அழிக்கும் நோக்கத்தில் அவருக்கு எதிராக 5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அவதூறு வழக்கைத் தாக்கல் செய்யும் தனது முடிவு எடுக்கப்படவில்லை.
சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மத் இன்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2020இல் வெளியிடப்பட்ட ஒரு முகநூல் பதிவு தொடர்பான விசாரணையின் இரண்டாம் நாளில், நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முஹம்மது ஷாபி அப்துல்லா குறுக்கு விசாரணை செய்தபோது சூல்கிப்ளி இவ்வாறு கூறினார்.
அமானா இக்தியார் மலேசியா அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தனது மகள் நூருல் இமானின் நியமனத்தை உறுதி செய்வதற்காக, அவர் உறவினர்களுக்குச் சலுகை காட்டியதாக அந்தப் பதிவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
நஜிப், டத்தோ டாக்டர் அஷ்ராப் வாஜ்டி டுசுகி ஆகிய இருவர் மீதும் வழக்குத் தொடுத்துள்ளீர்களா என்று முஹம்மது ஷபி கேட்டபோது, சூல்கிப்ளி அதை உறுதிப்படுத்தினார்.
ஆனால் அஷ்ராப் சம்பந்தப்பட்ட வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
அதே பிரச்சினை குறித்து செய்தி வெளியிட்ட செய்தித்தாள் மீது தாம் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
