செய்திகள் மலேசியா
நாட்டில் எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டே தான் இருக்கின்றன என்ற கூற்றுகளை பிரதமர் கடுமையாகச் சாடினார்
கோலாலம்பூர்:
இந்த நாட்டில் எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றன என்று கூறும் சில அறிஞர்களின் கூற்றுகளை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார்.
அது துல்லியமற்றது. மேலோட்டமானது என்று விவரித்த பிரதமர்,
தற்போது உலகம் மேற்கு ஆசிய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், இந்தக் கூற்று மக்களைத் தவறாக வழிநடத்துகிறது என்று கூறினார்.
புகழ்பெற்ற அறிஞர்களின் கருத்துக்கள் உள்ளன. பல ஆதரவாளர்களும் உள்ளனர். உதாரணமாக எண்ணெய் விலை உயர்வு சரியானது அல்ல என்ற கருத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.
மற்ற நாடுகளில் எண்ணெய் விலை உயர்வதில்லை, மலேசியாவில் மட்டுமே உயர்கிறது என்ற கருத்து நிலவுகிறது.
மாறாக, இந்த நாட்டிற்கு எண்ணெயைக் கொண்டு வருவதற்கான காப்பீட்டுச் செலவுகள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்ததே எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம் என்று அவர் விளக்கினார்.
போருக்கு முன்பு ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கி, இப்போது பெங்கராங்கிற்கு மாற்றப்பட்ட எண்ணெயின் விலை, காப்பீட்டுச் செலவு 100 சதவீதத்திற்கும் அதிகமாக ஆனதால் அதிகரித்துள்ளது.
பெங்காராங்கில் பதப்படுத்தப்படும் அடிப்படை எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
