செய்திகள் மலேசியா
ஜாலான் மஸ்ஜித் இந்தியா புதிய தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் படிப்படியாக நடைபெறும்: பார்த்திபன்
கோலாலம்பூர்:
ஜாலான் மஸ்ஜித் இந்தியா புதிய தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் படிப்படியாக நடைபெறும்.
ஆலயத் தலைவர் பார்த்திபன் இதனை கூறினார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் இப்பிரச்சினைகள் எல்லாம் முறை பேசி தீர்க்கப்பட்டு தற்போது புதிய ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்.
இவ்வேளையில் அவருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காரணம் இவர்களை இல்லை என்றால் இவ்வாலயப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்காது என்று பார்த்திபன் கூறினார்.
அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின் ஆலயத்தின் பட்டுமானப் பணிகள் படிப்படியாக தொடங்கும். இரண்டு மாடிக் கட்டடமாக இவ்வாலயம் கட்டப்படும்.
ஆனால் எப்போது ஆலயம் கட்டு முடிக்கப்படும் என்று உறுதியாக கூற முடியாது.
எது எப்படி இருந்தாலும் இவ்வாலயம் கட்டி முடிப்பதற்கு அனைவரின் ஆதரவும் தேவை என்று பார்த்திபன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
