செய்திகள் மலேசியா
பூனைகளின் மரணக் கூடாரம்: துர்நாற்றத்தால் வெளிச்சத்திற்கு வந்த பூனைகளின் அவல நிலை
ஷா ஆலாம்:
சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு அழுக்கு நிறைந்த அடுக்ககத்தில் 41 பூனைகள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் மற்ற 36 பூனைகள் உயிருடன் இருந்தாலும் கூண்டுகளில் பலவீனமான நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
31 சடலங்கள் ஒரு உறைவிப்பான் பெட்டியில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு கிடந்தன. மேலும் 10 சடலங்கள் வரவேற்பறையிலும் கூண்டுகளிலும் சிதறிக் கிடந்ததாக கோஸ்மோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 36 பூனைகள் கூண்டுகளில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அவை பலவீனமான நிலையில் இருந்ததாக அது தெரிவித்துள்ளது.
துர்நாற்றம் குறித்த பொதுமக்களின் புகார்கள், மார்ச் 13 அன்று மதியம் 4 மணியளவில் சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறை (டி.வி.எஸ்.) அதிகாரிகள் அந்த அடுக்கக அலகில் சோதனை நடத்த வழிவகுத்தது.
49 வயதுடைய ஒரு பெண் வசித்து வந்த அந்த அழுக்கு நிறைந்த அடுக்ககத்தில், அழுகிய பூனை சடலங்கள் கடுமையான துர்நாற்றத்தை வீசின.
டி.வி.எஸ். சிலாங்கூர் இயக்குநர் டாக்டர் ஹஸ்ஸுசானா கலீல், இந்த நிலைமை கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சாலாக் திங்கியில் உள்ள கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட பூனைகள் பல்வேறு வயது, பாலினம், இனங்களைச் சேர்ந்தவை. அவை அனைத்தும் கடுமையான எடை குறைவு , பலவீனமான நிலையில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
"அவை புறக்கணிக்கப்பட்டு, ஒழுங்காக கவனித்துக் கொள்ளப்படவில்லை என்று நம்பப்படுகிறது" என்றார் அவர்.
சந்தேக நபர், சுமார் ஒரு வருடமாக பூனைகளை வைத்திருந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் இந்த வழக்கிற்குப் பின்னால் உள்ள நோக்கத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
மேலதிக நடவடிக்கைக்காக துணை வழக்குத் தொடரும் அதிகாரியிடம் சமர்ப்பிப்பதற்கு முன், விசாரணை ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கு 2015 ஆம் ஆண்டின் விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபருக்கு ரிம100,000 வரை அபராதம், அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
