செய்திகள் உலகம்
ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்குவதாகக் கண்டறியப்பட்ட எந்த நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும், விதிவிலக்கு இல்லாமல், 50 சதவீத வரி விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.
தெஹ்ரானுடன் இரண்டு வாரப் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்த நாடும், அமெரிக்காவிற்கு விற்கப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் உடனடியாக 50 சதவீத வரியை எதிர்கொள்ளும். எந்த விதிவிலக்குகளோ அல்லது சலுகைகளோ இல்லை" என்று டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், டிரம்ப் அந்த அறிக்கையில் எந்த நாட்டையும் குறிப்பாகக் சொல்லவில்லை.
அமெரிக்க, இஸ்ரேலிய அழுத்தங்களை எதிர்கொள்வதற்காக, ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், நாட்டின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இரட்டைப் பயன்பாட்டு தொழில்நுட்பங்களை வழங்குவது உட்பட, ஈரானின் இராணுவத் திறன்களை வலுப்படுத்த சீனாவும் ரஷ்யாவும் உதவுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ரஷ்யாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த போதிலும், சமீபத்திய காலத்தில் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பெய்ஜிங்கும் மாஸ்கோவும் மறுத்துள்ளன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 2:12 pm
10,000 மடங்குத் துல்லியமாகப் புற்றுநோயைக் கண்டறியும் புதிய கையடக்கக் கருவி
May 26, 2026, 12:58 pm
லாவோஸில் தங்கம் தேடச் சென்ற 7 பேர் குகையில் சிக்கினர்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
