செய்திகள் உலகம்
உயிருக்கு உலை வைக்கும் 'கழுத்துத் தொங்கு' பயிற்சி; சீன இளைஞர்கள் மத்தியில் பரவும் ஆபத்தான கலாச்சாரம்
பெய்ஜிங்:
சீனாவில் கழுத்து எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி, கழுத்தைத் தொங்கவிட்டு ஆடும் 'கழுத்துத் தொங்கு' உடற்பயிற்சி இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது.
மருத்துவமனைகளில் வழங்கப்படும் கழுத்து எலும்பு சிகிச்சை முறையைப் பின்பற்றிச் செய்யப்படுவதாகக் கூறப்படும் இந்த விபரீதப் பயிற்சியின் போது, இதற்கெனத் தயாரிக்கப்பட்ட பிரத்யேகக் கருவியில் தலையை மாட்டி உடலை ஊசல் போல ஆட்டுகின்றனர்.
சீனாவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் கழுத்து எலும்பு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தங்களுக்கு ஏற்படும் வலியைக் குறைக்க இத்தகைய ஆபத்தான முறையை அவர்கள் கையாளுவதாகத் தெரிகிறது.
முன்பு முதியவர்கள் மட்டுமே செய்து வந்த இந்த உடற்பயிற்சி, தற்போது சமூக ஊடகங்களின் தாக்கம் காரணமாக இளைஞர்களிடமும் பிரபலமாகி வருகிறது. ஆனால், இம்முறை உயிருக்கு உலை வைக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த 2024 மே மாதம் யாங் சூ என்ற 57 வயது நபர் இப்பயிற்சியின் போது மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முறையான மருத்துவக் கண்காணிப்பு இன்றிச் செய்யப்படும் இத்தகைய பயிற்சிகள் தண்டுவடத்தைப் பாதிப்பதுடன் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் போது உடல் எடையில் 10 முதல் 15 விழுக்காடு அழுத்தம் மட்டுமே கொடுக்கப்படும்; ஆனால் இந்தப் பயிற்சியில் முழு உடல் எடையும் கழுத்தில் இறங்குவதால் கழுத்து எலும்பு முறிவு அல்லது பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், இத்தகைய கட்டுப்பாடற்ற அழுத்தங்கள் இரத்த நாளங்கள், நரம்புகளைப் பாதித்து நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் இத்தகைய உயிருக்கு ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என மருத்துவ உலகம் அறிவுறுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 2:12 pm
10,000 மடங்குத் துல்லியமாகப் புற்றுநோயைக் கண்டறியும் புதிய கையடக்கக் கருவி
May 26, 2026, 12:58 pm
லாவோஸில் தங்கம் தேடச் சென்ற 7 பேர் குகையில் சிக்கினர்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
