நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பத்து பஹாட்டில் திடீர் சோதனை: 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கங்கார்: 

கங்கார், சுங்கை பத்து பஹாட் பகுதியில் மோட்டார் சைக்கிள்களுடன் சட்டவிரோதமாகக் ஒன்று கூடி வந்த இளைஞர்களைக் குறிவைத்து காவல்துறை நேற்று மாலை தீவிர சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. 

பொதுமக்களுக்குப் பெரும் அச்சத்தையும் இடையூறையும் ஏற்படுத்தி வந்த இப்பகுதியில், மாலை 6 மணியளவில் தொடங்கிய இச்சோதனையின் போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 77 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன. அத்துடன், விதிகளுக்குப் புறம்பாக உருமாற்றம் செய்யப்பட்டிருந்த 11 மோட்டார் சைக்கிள்களையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது அங்கு திரண்டிருந்த 50 நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 16 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவன் ஒருவனும் அடங்குவான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கங்கார் மாவட்டப் போக்குவரத்து விசாரணை, அமலாக்கப் பிரிவு, பெர்லிஸ் மாநிலத் தலைமையகத்துடன் இணைந்து நடத்திய இந்தச் சோதனையில் மொத்தம் 38 மோட்டார் சைக்கிள்கள் ஆய்வு செய்யப்பட்டன. 

பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என பெர்லிஸ் மாநிலத் தலைமைப் போலிஸ் அதிகாரி டத்தோ முஹம்மத் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset