செய்திகள் உலகம்
லெபனானில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதல்: 182 பேர் பலி
பெய்ரூட்:
லெபனான் தலைநகரான பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலில், ஒரே நாளில் 182 பேர் பலியாகி உள்ளனர். 890-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா, ஈரான் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்த நிலையில், இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பெய்ரூட்டின் முக்கிய குடியிருப்புப் பகுதிகள் நிலைகுலைந்தன. வானளாவிய கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமானதில் அப்பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இந்த கோரத் தாக்குதலில் செய்தி சேகரிக்கச் சென்ற சுசான் கலீல், காதா தாயெக் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் உயிரிழந்தது ஊடகத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரை முழுமையாக ஒடுக்கும் நோக்கில், கடந்த 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவென இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் புறந்தள்ளி, லெபனான் மீதான தாக்குதல் தொடரும் எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்தத் தொடர் அத்துமீறல்கள் லெபனானை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதாக அந்நாட்டு அதிபர் ஜோசப் அவ்ன் வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி உள்ளிட்ட தலைவர்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 10:23 am
ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்
April 22, 2026, 10:17 am
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்குப் பணிந்த ட்ரம்ப்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
April 21, 2026, 9:49 am
