நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த வார விலைகளின் அடிப்படையில் பெட்ரோல் விலையில் குறைவு ஏற்படாது: நிதியமைச்சு

புத்ராஜெயா:

கடந்த வார விலைகளின் அடிப்படையில் தற்போது  பெட்ரோல் விலையில் குறைவு ஏற்படாது.

நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை கூறியது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இருந்த போதிலும், பெட்ரோல் நேற்றைய விலையை அடிப்படையாகக் கொள்ளாமல், முந்தைய வாரத்தின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் பெட்ரோல் விலை குறையவில்லை.

கடந்த ஐந்து வாரங்களாக உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், போக்குவரத்து, காப்பீடு உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளன.

தற்போதைய விலைகள், ஒரு பேரலுக்கு சுமார் 150 அமெரிக்க டாலர் (பெட்ரோல்) 250 அமெரிக்க டாலர் (டீசல்) என்ற கடந்தகால விநியோகத்தின் அதிக விலையை இன்னும் பிரதிபலிக்கின்றன என்று நிதியமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset