நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; ஜுன் 13ஆம் தேதி நடைபெறும்: பத்துமலை

கோலாலம்பூர்:

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ஜூன் 12ஆம் தேதி நடைபெறும்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இப் போட்டி நடத்தப்படுகிறது.

அவ்வகையில் 22ஆவது ஆண்டாக இப்போட்டி ஜூன் 14ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறுகிறது.

சிலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச  தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றம், சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் ஆதரவில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்காக இப்போட்டி நடத்தப்படும்.

ஆனால் இம்முறை முதல் முறையாக சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்காக இப்போட்டி நடத்தப்படவுள்ளது.

இதில் ஆண்கள் பிரிவில் 64 குழுக்கலும் பெண்கள் பிரிவில் 24 குழுக்களும் பங்கேற்கவுள்ளனர்.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு நமச்சிவாயம் கிண்ணமும் பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு ரவீந்திரன் கிண்ணமும் பரிசாக வழங்கப்படும்.

இப்போட்டிக்கான குலுக்கல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பத்துமலை கூறினார்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் ஏற்பாடுகள் குறித்து நேற்றைய சங்க நிர்வாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சங்கத்தின் துணைத் தலைவர்கள் கென்னத் கண்ணா, குணசேகரன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset